Thursday, December 14, 2017

அருவி படமும் HOPE SONG தந்த ஆறுதலும் - 1




அருவி என்றொரு படம் திரைப்பட விழாக்களில் பெயர் வாங்கிய நல்ல திரைப்படம் என்றொரு பிம்பம் மட்டுமே என்னுள் இருந்தது, நீண்ட நாட்களாக. அதை தாண்டி இது ஒரு முக்கியமான படம் என்று எனக்கு சூளுரைத்தது ஒரு முகப்புத்தகப் பதிவே !!

இந்த ஆண்டு வெளியான இசை ஆல்பங்களில் தனித்து நின்ற அருவி யை எனை கேட்க வைத்ததும் ஒரு முகப்புத்தகப் பதிவே !!

படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் கேட்டு மெய்சிலிர்த்து தான் போனேன். அதில் உள்ள வரிகளில் சில என் நெஞ்சை அடைத்தது.

என் மனதை தொட்டவை என அவ்வளவு எளிதாக கடந்து செல்லவியலாது. காரணம் அந்த வரிகளினால் எனக்குண்டான தாக்கங்கள் சொல்லி மாளாது.
அவைகளில் சில
“அடச்ச மனசு சிரிச்சு பேச
அடைக்கும் துயரம் அரண்டு மிரளும் “ என்ற வரிகளில் நான் அர்த்தம் தேடிக்கொண்டிருக்கையிலே
“மஞ்சள் நிலவே மயக்கும் மதியே
மயங்கி போகாதே”

என்ற வரியின் எதுகை அழகிலே மயங்கித்தான் போனேன்.

எவ்வளவு ஆழமான வரிகள் அவை. Hope song என்பது இப்பாடலின் பெயர். பெயருக்கு ஏற்றார் போல் நம்பிக்கை தருவதாய் இருக்கிறது.
எதாவது மனசு கஷ்டப்பட்டு அம்மாகிட்ட போனா, அடி விழுதோ இல்லையோ இரண்டு வார்த்தை ஆறுதலுன்ற பேருல வரும். அதுல ஒன்னு கண்டிப்பா ‘இதான் லைஃப் இதெல்லாம் தாண்டி தான் நீ வாழ்ந்து காட்டணும்’ னு சொல்லுவாங்க.

அதே வார்த்தைகளை “ இதுவே வாழ்க்கை,
வலியும் கூட அனுபவம் ” அவ்ளோ அழகான பின்னிசையோட பாடுறப்போ தான் என்னமோ செஞ்சது.
எவ்வளவு தான் அம்மா கிட்ட கர்வம் பாத்தாலும், எவ்வளவு தான் நொட்ட சொன்னாலும் அனுபவமிக்க பேச்சுக்கு பின்னால இருக்குற அர்த்தத்த கஷ்டபடுற நேரத்துல நமக்கு தர்ர ஆறுதல மறுக்கவோ மறக்கவோ முடியாது. இந்த ‘ hope song ’ கஷ்டபடுற மனசுக்கு தான் அவ்ளோ ஆறுதல். 

மத்த வரிகள் பத்தி சொல்லனும்னா மத்த பாட்டெல்லாம் கேட்டுருந்தா தான் புரியும். அப்படி கேட்டதுல நான் ‘அருவி’ பத்தி புரிஞ்சிக்கிட்டது என்னன்னா, அருவிங்குற சின்ன பொன்னு இயற்கை சூழல் உள்ள இடத்துல பிறந்துட்டு மனுஷங்க மனுஷங்களா இருக்குற இடத்துல வளர்ந்துட்டு நகர வாழ்க்கை வாழ வர்றா !! மனுஷங்க இயந்திரமா வாழ்ற ஒரு கட்டமைப்புக்குள்ள வரும்போது அவ சந்திக்குற பிரச்சனைய தான் அருவி கதை யா இருக்கும்னு யூகிச்சேன். இதுக்கு கம்ப சூத்திரம் லாம் படிக்கல, 'liberty song, baby song, party song' இதல்லாம் கேட்டு முடிச்சப்பவே இந்த பிம்பம் உண்டாயிருச்சு. 

.... தொடரும் Hope song ல உள்ள மத்த வரிகள் என்ன பாதிச்ச விதத்த பத்தி இன்னும் detail அ சொல்றேன் அடுத்த பதிவுல. 


நாளைக்கு படத்துக்கும் போறேன். படத்தோட பாடல்கள் எனக்குள்ள ஏற்படுத்துன தாக்கத்த வச்சு நானே அருவி க்கு கட்டமச்ச பிம்பம் நாளைக்கு எப்படி திரைல எப்படி இருக்குனு பாப்போம். படம் எப்படி இருந்தாலும், பாடல்கள் பத்தின பதிவு எல்லாம் டைரில இருக்கு, அத நாளைக்கு type பண்ணி பதிவிடுறேன், இதே திரில. 

No comments:

Post a Comment